சென்னை:
அர்த்தம் புரியாமல் அமைச்சர் அவசரப்பட்டு பேசியுள்ளார். அவருக்கு இணையான தெரு பேச்சுக்கு நான் தயாரில்லை என்று ஆடிட்டர் குருமூர்த்தி டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.
முதலில் Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையானது impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது. நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது.
இரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்றபடி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. impotent என்றால் திறனற்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.
நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப் பேச்சில் ஈடுபட்டால் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன். நான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தவன். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு.
காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் impotent என்கிற வார்த்தை நாடாளுமன்றத்துக்கு ஏற்றதல்ல. impotent அல்லதுincompetent என்கிற வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளலாம் என்று disgrace என்கிற வார்த்தையை உறுப்பினர் வாபஸ் பெற்றார். அதனால் impotent என்பது சாதாரண வார்த்தை.
மேலே கூறிய ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடந்த சர்ச்சை பற்றி அடுத்து வரும் டுவிட்டரில் கானாலாம். எனவே நான் டுவிட்டரில் கூறியimpotent என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்து பரிதாபப் படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது