நாமக்கல்: அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு, மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவை உண்டார். தொடர்ந்து சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்று காலை  நாமக்கல் நகராட்சி அழகு நகர் தொடக்கப்பள்ளிக்கு சென்ற அங்கு மாணாக்கர்களுக்கு வழங்கப்படும்  காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். காலை உணவு திட்டம் மற்றும் பள்ளிவகுப்பறைகள் குறித்து கேட்றிந்ததார். மாணவர்களின் நோட்டுகளில் தனது கையெழுத்தை இட்டார்

இதையடுத்து,  அங்கு மாணாக்கர்களுக்கு  வழங்கப்பட்ட உணவை, வாங்கி அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர்.என். ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நகராட்சி ஆணையாளர் கி.மு.சுதா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சேந்தமங்கலம் ஜங்கலாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார்.!