சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்புறங்களில் வசிப்பவர்கள், பணி செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பேருந்து, ரயில்களை இயக்கி வருகிறது. ஏற்கனவே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவுகளும் முடிவடைந்த நிலையில், தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பான இன்று ஆலோசனை நடத்துகிறது. சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு (2021) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக தமிழக அரசுபோக்குவரத்துத் துறை தெரிவித்தது.  அதன்படி, தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் திரும்ப வர  17,719 பேருந்துகளும் இயக்கப்பட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்காதாம்! உரிமையாளர்களுக்கு ஆதரவாக பேசும் அமைச்சர் சிவசங்கர்