சென்னை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில் அவர்  நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜி தனது மனுவில்

”எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. பண பரிமாற்ற வழக்கில் எனனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. என்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்”

எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி அல்லி மேற்கொண்டார். பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இன்றைய விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் தரப்பில் அமலாக்கத்துறையினர் ஆதாரங்களைத் திருத்தி பொய்க் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.   அமலாக்கத்துறை அதை மறுத்ததோடு அவர் யார் யாரிடம் இருந்து எவ்வளவு ரூபாய் பெற்றார் என்னும் தகவல் உளாதாக தெரிவித்த்து.

இந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.