சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது. அவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.

அதாவது இந்த தகுதி தேர்வு 7 ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றார்.

முன்னதாக இதனிடையே, 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் இந்த தேர்வு செல்லுபடியாகும் வகையில் அரசு அறிவிக்க வேண்டும என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், தற்போது அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது என்று அறிவித்துள்ளது, அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது எனலாம்.