சென்னை
இதுவரை தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.’
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
உதனால் தனியார் மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குகளில் கூட கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுச் சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மாத இறுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன.
இதைப் போல் டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
”தமிழகத்தில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன”
என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.