சென்னை

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்புகளை தொடங்குகிறது.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்புகளை நடத்தி வருகிறது.  இந்த வகுப்புகள் வரும் 2024 ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு,  கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளவும் கல்வெட்டு படி எடுத்தல், மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த வகுப்புகள் வார விடுமுறையான ஞாயிறு தோறும் ஓராண்டுக்கு நடைபெற உள்ளது.

வகுப்புகளில் சேர விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை  www.ulakaththamizh.in என்னும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சியாகும்.  இதற்கு வயது வரம்பு இல்லை,  இதற்கு விண்ணப்பக் கட்டணம், ரூ.100, சேர்க்கை கட்டணம்ரூ.3000 மற்றும்அடையாள அட்டை கட்டணம் ரூ.100 என ரூ.3200 செலுத்த வேண்டும்.

 கட்டணத்தை The DIRECTOR, International Institute of Tamil Studies என்றும் பெயரில் வங்கி வரவோலையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும் அல்லது நேரடியாக நிறுவன அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பம் செய்திடலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2023 டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும். வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் நிறுவன வலைத்தளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

மேலும் தகவல்களுக்கு, வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044-22542992, 9500012272 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.