சென்னையில் இன்று காலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதை அடுத்து அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

கெங்குரெட்டி சுரங்கப்பாலம், பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாலம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாலம், துரைசாமி பாலம், அரங்கநாதன் சப்-வே ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது.

பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாலம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சுமார் 3 செ.மீ. அளவு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக கொளத்தூர் பகுதியில் 62.4 மி.மீ. மழையும் அம்பத்தூர் பகுதியில் 54.3 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

கனமழை பெய்து வருவதை அடுத்து அவசியமின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.