விழுப்புரம்

பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மூலம் பாசிச ஆட்சியைக் கொண்டு வர முயல்வதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

நேற்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணிக் கட்சி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில்

”இந்த தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு பெற வேண்டும்.

அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுக்கால பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்குச் செய்த கொடுமைகள் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். 10 ஆண்டுகளில் பா.ஜனதா எதையும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகளில் சொன்னதை செய்த முதல்-அமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியைக் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது. சர்வாதிகாரியாக வேண்டுமென்று மோடி செயல்படுகிறார்”

என்று தெரிவித்துள்ளார்..