சென்னை:

மிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலட்சியத்தால் அவரது கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஓட்டுநரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை டிரைவரின் உறவினர்கள் விரட்டியடித்தனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

அமைச்சர் ஒ.எஸ். மணியனின் கார் ஓட்டுநராக இருந்து வந்தவர் சவுந்திரராஜன். இவர் சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருகிறார்.  வழக்கம் போல சென்னை கிரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள அமைச்சர் வீட்டுக்கு பணிக்கு வந்த சவுந்திரராஜன், காரை சுத்தப்படுத்திவிட்டு அமைச்சரை காரில் ஏறும்படி பணித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சவுந்திரராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அமைச்சர் ஓஎஸ் மணியன், உடடினயாக முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் வீட்டிற்குள் சென்றதாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்தே வேறு ஒருவர அனுப்பி, டிரைவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி அறிவுறுத்தியாக கூறப்படுகிறது.

அதையடுத்து, இருசக்கர வாகனத்தில் அழைத்துசெல்லப்பட்ட சவுந்திரராஜன் வலி அதிகம் காரணமாக வண்டி யில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது தலையில் ஏற்பட்ட அடி காரணமாகவும் அவர் அந்த இடத்திலேயே  இறந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனிதாபிமானமற்ற இந்த செயலுக்கு பலர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், மறைந்த சவுந்திரராஜன் வீட்டுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆறுதல் கூற சென்றுள்ளார்.

அப்போது, அவரது உறவினர்கள், அமைச்சரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். உரிய நேரத்தில் மருத்துவ மனை யில் அனுமதித்து இருந்தால், காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறிய அவர்கள், அமைச்சரை வீட்டுக்குள் விடாமல் விரட்டியடித்துள்ளனர்.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இந்த சம்பவம் குறித்து, முடிந்தால் தம் மீது போலீசில் புகார் கொடுங்கள் என்று  சவால் விடுத்ததாக கூறப்படுகிறது