சேலம்: திமுக அமைச்சர்களின் அடாவடி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், கட்சியினரை கல்லால் அடித்த அமைச்சர் நாசரின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அமைச்சர் நேரு, கட்சி தொண்டரின் சட்டையை பிடித்து ஓங்கி அடித்த விவகாரம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட திமுக கவுன்சிலர் ஒருவரின் தலையில் அமைச்சர் நேரு அடித்தது கடுமையாக கண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது, கட்சி தொண்டரின் சண்டை பிடித்து உதைத்த விவகாரம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.   கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்து,  சால்வை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உதயநிதி ஸ்டாலின் அருகே நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு நின்று இருந்தார்.

வரிசையாக திமுக தொண்டர்கள் சென்று உதயநிதிக்கு சால்வை கொடுத்து அவருக்கு வணக்கம் வைத்து விட்டு சென்றார்கள்.  ஒரு தொண்டர் உதயநிதிக்கு கை கொடுக்க முயன்ற போது அமைச்சர் நேரு அவரின் தலையில் ஓங்கி அடித்து சட்டையை பிடித்து தள்ளினார்.  அப்போதும் ஆத்திரம் தீராமல் பின்பக்கமாக கழுத்தை  பிடித்து அங்கிருந்து தள்ளினார்.

இதை பார்த்து பதறிய உதயநிதி,   அமைச்சரிடம் ஏண்ணே இப்படி.. இல்ல வேண்டாம்  என்று சமாதானப்படுத்தினார்.   இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகிய வருகிறது.

முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் நாசர் தனக்கு உடனே நாற்காலி எடுத்து போடாததால் ஆத்திரத்தில் தொண்டர்கள் மீது கல்லை விட்டு எறிந்தார் .   அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

அமைச்சர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல, ஏற்கனவே திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பிலான புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது, அங்குவந்த பெண்களுக்கு குடம் பரிசாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடமாக எடுத்து பெண்களுக்கு அமைச்சர் கே.என். நேரு விநியோகம் செய்து வந்தார். அப்போது, திடீரென குடங்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்த திமுக வார்டு கவுன்சிலரின் தலையில் அமைச்சர் கே.என். நேரு ஓங்கி அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதுடன் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுக்க வந்த திமுக தொண்டரை  சட்டையை பிடித்து ஓங்கி அடித்து அங்கிருந்து பிடித்து தள்ளி இருக்கிறார் அமைச்சர் நேரு .  இந்த வீடியோவும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒருவர் கல்லால் அடிக்கிறார் ஒருவர் கையால் அடிக்கிறார் . உங்கள் பிழைப்பு நாய் பிழப்பாக  இருக்கும் போல தெரிகிறது. பாவம் உபிஸ் என்று வீடியோவை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றார்கள்.

திமுகவினரின் சுயரூபம் அடிக்கடி இப்படி வெளிப்பட்டு விடுகிறது உபிஎஸ் இதை வரவேற்பார்களா? எதிர்பார்களா? என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.