சென்னை: தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம், ஈரோடு, திருப்பூர் கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஒடியாடி பணியாற்றியவர் அந்த தொகுதி அமைச்சர் முத்துசாமி. அவர் சில நாட்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், காய்ச்சல், இருமல், சளி போன்று அறிகுறிகள் காணப்பட்டன.
இதையடுத்து, அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியாகி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் முத்துசாமி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel