நாகர்கோவில்: ராகுல்காந்தியின் இன்றைய பாதயாத்திரையின்போது, ஏராளமான பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்த நிலையில், மோடி அரசின் மோமான நிர்வாகத்தில் நாட்டில்  வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்கள், எனக்கு வேலை வேண்டும் என்று பொறிக்கப்பட்ட டிஷர்டுடன் நடைபயணம் மேற்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல், இந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி எம்பியின் இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்தை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை  கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு பகுதியில் இருந்து தொடங்கினார். தொடர்ந்து,  சாமியார் மடம், சிராயன்குழி, மார்த்தாண்டத்தில் மதிய உணவு இடைவேளையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை, மீண்டும் நடைபயணத்த மேற்கொள்ளும் ராகுல்,  மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை வழியாக தமிழ்நாடு, கேரள எல்லையான பாறசாலை வரை செல்கிறார். அங்கு இரவு ஓய்வு எடுக்கறார்.  அதைத்தொடர்ந்து நாளை காலை  கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

இன்றைய ராகுலின் நடைபயணத்தின்போது ஏராளமான பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ராகுலை சந்தித்து கைகுலுக்கியதுடன், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதற்கிடையில், நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை முன்னிலைப்படுத்தி,எராளமான இளைஞர்கள், எனக்கு வேலை வேண்டும் என வாசகம் பொறிக்கப்பட்ட டிஷர்ட் அணிந்து, ராகுலுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர்.