சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைகான பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

2021ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தால் வேளாண்மைத் துறைகாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் ஆட்சிக்கு வந்து தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் தொடங்கி தற்போது இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் வரை எல்லா பட்ஜெட் தொடர்களிலும் வேளாண்மைத்துறைகான பட்ஜெட் தனியாக வாசிக்கப்பட்டு வருகிறது.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தற்போது பச்சைத்துண்டு அணிந்து பேரவையில் பட்ஜெட் வாசித்து வருகிறார்.


“2021-22ஆம் ஆண்டில் மொத்த சாகுபடி பரப்பு ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஹெக்டர் அதிகரித்து மொத்தம் 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது

2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்தது

“மகசூலை அதிகரிப்பதே இலக்கு”. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு

குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு மற்றும் கம்பு வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் – ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் குறித்த பேசுகையில், கம்பு, கேழ்வரகு, சோளம், பனிவரகு, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிகுந்துள்ளதால் தமிழகத்தில் இதனை மீண்டும் செழிக்க செய்யும் பொருட்டு

சிறுதானிய மண்டலங்களில் நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் சேர்த்துக் கொள்ளப்படும்.

சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளதையொட்டி தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 100 சிறுதானிய உற்பத்தி குழுக்களை உருவாக்கவும், 12500 ஏக்கரில் தெளிப்பு நீர்பாசனம் அமைக்கவும் மானியம் வழங்கப்படும்.

மக்களிடம் சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க சிறுதானிய திருவிழா இந்த இயக்கம் மூலம் நடைபெறும்.

சிறுதானிய உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிக்கும் வகையில் கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.

“ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும்”

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு

2504 ஊராட்சிகளில் ரூ230 கோடியில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும்

15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்: வேளாண் பட்ஜெட்

நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும்.

“சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்; ரூ.82 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்”

“தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும்”

“சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன”

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக இருக்கலாம்.

2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.

கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு.

வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.

வரலாறு காணாத அளவில் நேரடி நெல் கொள்முதல் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவைகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.