சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  ,  பச்சை நிற துண்டு அணிந்து  தமிழக சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

 • 2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்தது.
 • நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை  எடுக்கப்படும். தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 • தமிழ்நாட்டில் வேளாண் பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
 • 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
 • இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்
 • .ஆதித்திராவிடர், பழங்குடியின சமூகங்களை சேர்ந்த சிறு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேர் பரப்பில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்.
 • அங்கக வேளாண்மை: ரூ.5 கோடியில் சிறப்பு திட்டம்
 • ஒரு லட்சம் ஏக்கரில் மாற்று சாகுபடியை ஊக்குவிக்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • வேளாண் மாணவர்கள் 200 பேருக்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
 • ஆர்கானிக் எனப்படும் அங்கக வேளாண் திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.
 • வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • 60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ரூ.15 கோடி செலவில் வழங்கப்படும்.
 • ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
 • வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.
 • புன்செய் நிலங்களுக்கு நிலங்களுக்கு உரிய பயிர்களை அறிமுகம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
 • பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
 • 2,064 கிராமங்களில் விவசாயிகளை உள்ளடக்கிய வேளான் முன்னேற்ற குழுக்கள் அமைக்கப்படும்.
 • 5 மாவட்டங்களில் சிறுதானிய மணடலங்கள் விரிவாக்கம் செய்யப்படும். சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து பயிற்சிகள் அளிக்கப்படும்.
 • தமிழ்நாடு அரசால் ரூ.1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
 • உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும்.
 • நீர் நிலைகளை தூர் வாரியதால் நிலத்தடி நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
 • கடந்த 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 • விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும், வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 •  எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் பொருட்டு 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் அமைக்கப்படும், மேலும் சூரியகாந்தி, நிலக்கடலை எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்க ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.பயறு வகைகளின் உற்பத்தியை பெருக்கும் விதமாக ரூ.30 கோடி நிதிஒதுக்கீடும், பயிர் சாகுபடி மற்றும் வேளாண் துறை குறித்த சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.