சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  ,  பச்சை நிற துண்டு அணிந்து  தமிழக சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.

இவ்விருது ₹5 லட்சம் காசோலையுடன், பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 

கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்- குறைந்த சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு என இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் துறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும்.

பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.

உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS (One Stop Solution) இணையதளம் அறிமுகம்.

வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும்.

சூரியகாந்தி, எள், நிலக்கடலை, சோளப் பயிர் சாகுபடியைப் பரவலாக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு.

அதில் வரும் ஆண்டில் தமிழ்நாட்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக 2 ஆயிரத்து 504 கிராம ஊராட்சிகளில் 230 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்

10 ஏக்கர் தரிசாக உள்ள பகுதிகளை கண்டறிந்து ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி பம்பு செட்கள் இலவசமாக அமைத்து தரப்படும். சொட்டு நீர் பாசனம் மூலம் பழ சாகுபடி மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும்.

2504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னமரங்கள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்

பண்ணைக்குட்டைகள் அமைத்து நிலத்தடி நீர் மட்டம் மேம்படுத்தவும், மீன் வளர்த்து வருமானம் ஈட்டவும் வழி வகை செய்யப்படும்

300 ஆதிதிராவிட பழங்குடியினர் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி பம்பு செட்டுகள் இலவசமாக அமைத்து தரப்படுவதுடன் மானிய விலையில் சொட்டுநீர் பாசனம் அமைத்துத்தரப்படும் என தெரிவித்துள்ளார்.