புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் , அரசு மருத்துவமனை பார்வையிட சென்ற போது , அங்கு  சுத்தமில்லாமல் இருந்த கழிவறையை, தானே சுத்தம் செய்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மல்லாடி கிருஷ்ணாராவ். இவர் மாநிலத்தில்உள்ள அரசு  இந்திரா காந்தி ருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டை பார்வையிட சென்றார்.

அப்போது, அங்கு நோயாளிகளுக்கான கழிவறை சுத்தமின்றி அசிங்கமாக காணப்பட்டது. இதை யடுத்து, சுகாதாரத்துறை ஊழியர்களை கடிந்து கொண்ட அமைச்சர், பாதுகாப்பு கவச உடையுடன் அந்த கழிவறையை சுத்தம் செய்தார்.

இதுதொடர்பான  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.