சென்னை: வடசென்னையின் பிரதான மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவனையில் லிப்டில்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர்,  முதல் மாடியில் இருந்து 3வது மாடிக்கு லிப்டில் சென்றார். அவருடன் மருத்துவர்கள் உள்பட பலர் சென்றனர். இந்த நிலையில், லிப்ட் திடீரென 2வது மற்றும் 3வது தளத்துக்கு இடையில் லிப்ட் பழுதாகி நின்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் உயர்ந்த மேஜைக்கொண்டு வந்து, லிப்ட் அருகில் வைத்து லிப்ட் கதவை திறந்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகளை மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.