சென்னை : 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் . என்.எஃப்.டி.சி மற்றும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இணைந்து வழங்கும் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். 2003ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. . இதையடுத்த சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக விருதுகளும் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா, 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் டிசம்பர் 15 முதல் 22 வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் 107 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகும் திரைப்படங்கள் பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திரைப்பட விழாவுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாள்களில் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள படங்கள், பதிவுக் கட்டணம் உள்பட விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.