மதுரை: நர்சிங், பாரா மெடிக்கல் சார்ந்த 19 படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

தமிழ்நாட்டில், பிஎஸ்சி நர்சிங் உள்பட பாராமெடிக்கல் வகை படிப்புகள் உள்ளன.  மாநிலம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,276 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 13,832 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்ட நிலையில், இன்று தரிவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

மதுரையில் ஆய்வு நடத்தி வரும் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிஎஸ்சி நர்சிங்  உள்பட மருத்துவம் சார்ந்த 19 பட்டப் படிப்பகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.  அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,276 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 13,832 இடங்களுக்கும் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

தரவரிசை பட்டியலை http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், www.tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் தரவரிசை பட்டியலை காணலாம்.

2021-2022-ஆம் ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு 16,118 இடங்களில் சேர 64,900 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.