சென்னை: தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 ஆயிரம் உடன் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது தொகுதியான சைதாப்பேட்டையில் இன்று காலை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து முதல்கட்ட நிவாரண தொகை ரூ.2000 வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் 14 வகையான மளிகை பொருட்கள் விளங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். 14 வகையான மளிகை பொருட்களுடன், கொரோனா நிவாரண நிதி ரூ.2,000-த்தையும் வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை நானடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனும் கலந்து கொண்டுள்ளார்.