டெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 39,27 லட்சம் பேருக்கும்,  தமிழகத்தில் 2.58 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி ஒன்றே தீர்வு என கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ஆரம்பக்கட்டத்தில் மக்கள் மத்தியில் தயக்கம் காணப்பட்ட நிலையில், அரசின் விழிப்புணர்வு நடவடிக்கையை அடுத்து தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

அதன்படி நாடு முழுவதும், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை: 25,90,44,072 (25 கோடியே 90லட்சத்து 44ஆயிரத்து 72 ஆக உள்ளது)

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை: 39,27,154 (39 லட்சத்து 27ஆயிரத்து 154) இவற்றில், முதல் டோஸ்: 20.98 கோடி (20,98,68,546) பேருக்கும் இரண்டாம் டோஸ்: 4.88 கோடி (4,88,44,775)பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.

அதே வேளையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்  1,05,97,418 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி,  நேற்று ஒரே நாளில் ( 14ஜூன்) 2,58,701 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று 2,327 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 68 ஆயிரத்து 734 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 26 ஆயிரத்து 983 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 853 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,114 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 1 லட்சத்து 60 ஆயிரத்து 17 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என தமிழக சுகாதாரத்துறை தெரவித்து உள்ளது.