சென்னை: மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார்.  அதில்,  தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை  உள்ளதால், அதையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டு உள்ளர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்து வரக்கூடிய 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியில் நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,  வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 3 தினங்களுக்கு தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில், 20- ம் தேதி தமிழகத்தில் இருக்க கூடிய செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதேபோல 21-ம் தேதி வடதமிழக மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும், 22-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுளள்து.

இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து, அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறு தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.