டெல்லி: அரசின் முயற்சியால், கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும்  கட்டுப்படுத்தபட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட,  1,136 பேர் உயிரிழந்துள்ளனர். இந் நிலையில் லோக் சபாவில் இன்று  பேசிய மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், அரசின் முயற்சியால், கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும்  கட்டுப்படுத்தபட்டு உள்ளது என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: 13 மாநிலங்கள் அதிக கொரோனா தொற்றுகளும், பலிகளும் உள்ளன. இந்த வரிசையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், பீகார், தெலுங்கானா, ஒடிசா, அசாம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அரசின் முயற்சியால், பாதிப்புகள் மற்றும் இறப்புகளை 10 லட்சத்துக்கு 3,328 பாதிப்புகள் மற்றும் 10 லடசம் மக்கள்தொகைக்கு 55 இறப்புகள் என கட்டுப்படுத்த முடிந்தது. பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது உலகின் மிகக் குறைவான பாதிப்பு கொண்ட நாடு இந்தியா என கூறினார்.