டில்லி

விமானக் கட்டணம் குறித்த விதிமுறைகளை இன்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு 4.0 ல் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.  அவ்வகையில் உள்நாட்டு விமானப்போக்குவரத்து வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.  இந்த பயணிகளுக்கான விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.  அத்துடன் விமானக் கட்டணம் குறித்த அற்விவிப்பை இன்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.

இன்று அமைச்சர் செய்தியாளர்களிடம், “ இதுவரை பல்வேறு நாடுகளில் சிக்கி உள்ள 20000 இந்தியர்களை ஏர் இந்தியா மூலம் மீட்டு இந்தியா அழைத்து வந்துள்ளோம்.  தற்போது வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.   அத்துடன் உள்நாட்டு விமானப் பயணம் வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது   தற்போது அதற்கான கட்டணம் ரூ.3500லிருந்து ரூ.10000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அளவுக்கு மீறி விமான கட்டணம் உயர்வதைத் தடுக்க  அரசு விமானக் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.  இந்த கட்டணம் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை வசூலிக்கப்படும்.   விமானத்தில் பயணம் செய்வோர் ஆரோக்ய சேது செயலியை மொபைலில் பயன்படுத்த வேண்டும்.  அதில் சிவப்பு தென்பட்டால் அவரால் பயணம் செய்ய முடியாது.   பயணம் செய்வோருக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யவே ஆரோக்ய சேது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கட்டணம் குறித்த அறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு :

  • அனைத்து விமான தடங்களும் பயண நேரத்தைக் குறித்து 40 நிமிடங்களில் இருந்து 210 நிமிடங்கள் வரை 7 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ..  முதல் கட்டமாக 40 நிமிடங்களுக்குள் பயண நேரம் இருக்கும்.   அதன்பிறகு 40-60 நிமிடங்கள், 60-90 நிமிடங்கள், 90-120 நிமிடங்கள், 90-120 நிமிடங்கள், 120- 150 நிமிடங்கள் அடுத்தடுத்த கட்டமாக இருக்கும்.
  • நடுவில் உள்ள இருக்கைகள் காலியாக் விடப்பட்டால் ச,மூக இடைவெளி விதி முழுமை ஆகாது என்பதால் நடுவில் உள்ள இருக்கைகள் நிரப்பப்படும்.
  • மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டும் பெரு நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு விடப்படும்.  மொத்த விமானங்கள் 100க்கு மேல் இருக்கும்.
  • அடுத்த கட்ட நகரங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவாகவே விமானங்கள் இயக்கப்படும்.
  • 40% டிக்கட்டுகள் குறைந்த மற்றும் நடுத்தர கட்டணத்தின் இடையில் விற்பனை செய்யப்படும்.
  • ஏற்கனவே ஒரு பாதையில் உள்ள கட்டணத்தை பொறுத்து குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.
  • ஆரோக்ய சேது செயலியை மொபைலில் வைத்திராத பயணிகள் அவசியம் பயனிக்க வேண்டி இருந்தால் சுய விவரங்களை அளிக்கலாம்.  அப்போது அவருக்குப்  பயணம் செய்ய தடை விதிக்கப்பட மாட்டாது.