சென்னை
தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் நிறமி கலந்த பஞ்சு மிட்டாய்க்கு மட்டுமே அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களைப் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனைப் பரிசோதித்தபோது பஞ்சுமிட்டாயில் “ரோடமைன் பி” என்னும் நிறமி ரசாயனம் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த ரசாயன புற்றுநோயை உருவாக்கக்கூடியது ஆகும்.
எனவே நேற்று தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. தடையை மீறி பஞ்சு மிட்டாயை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
இன்று தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்,
”நிறமி கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத்தான் தமிழக அரசு தடை விதித்துள்ளது., அரசு நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்க்குத் தடை விதித்துள்ளதே தவிர பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிறமி கலக்கப்படாத வெண்மை நிற பஞ்சுமிட்டாய்க்கு தடை இல்லை”
என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]