சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

16வது சட்டமன்றத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் வரும் 11ந்தேதி  நடைபெற உள்ளது. இதையொட்டி, தற்காலிக சபாநாயகராக மூத்த திமுக எம்எல்.  எம்.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 11-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு, கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வைபம் நடைபெற்றும். அதைத்தொடர்ந்து,  வரும் 12ந்தேதி முற்பகல் 10 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் தேர்தல்கள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை  அமைச்சருமான  துரை முருகன் நியமனம்  செய்யப்பட்டிருப்பதாக தமிழக சட்டமன்ற செயலர் தெரிவித்துள்ளார்.