அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி காலமானார்…

Must read

சென்னை: 
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி காலமானார். அவருக்கு வயது 67.
தமிழக வனத்துறை அமைச்சராக இருந்து வருபவர்  திண்டுக்கல் சீனிவாசன். இவரது மனைவி கண்ணாத்தாள். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானாதாக கூறப்படுகிறது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 5 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள்  மறைவு அதிமுகவினர் இடையே சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது இறுதி நிகழ்வுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் அமைச்சர் சீனிவாசனை போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து வருகின்றனர்.

More articles

Latest article