சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அமைச்சர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் தலைமைச்செயலகம் வந்து பணியாற்றினால் போதும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு 3வது முறையாக மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலும் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று மாநிலஅமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, அமைச்சர்கள்  வாரத்தில் திங்கள், செவ்வாய் கிழமையில் தலைமை செயலகம் வந்து பணிகளை மேற்கொண்டால் போதும் என்று முதல்வர்  அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]