நாளை 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு… விவரம்…

Must read

சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.
அதன்படி, கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களிலும்  நாளை முழு ஊரடங்கு உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்கள் ஆரஞ்சு மாவட்டங்களாக உள்ளது. இதனால் மத்திய அறிவித்துள்ள மேலும் 2 வார ஊரடங்கு நீட்டிப்பை தமிழகஅரசும் வரவேற்றுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த வாரம் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாட்களும், சேலம், திருப்பூர் மாநகராட்சியில் 3 நாட்களும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில்  மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்படும். மற்ற அனைத்துக் கடைகளும் கண்டிப்பாக அடைக்கப்பட்டிருக்க வேண்டும். இதை மீறுவோா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

More articles

Latest article