சென்னை

மைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் பால் விலை உயர்த்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது அவர்,

“இப்போதைக்குத் தமிழகத்தில் பால் விலையை இப்போதைக்கு உயர்த்துவதற்கு எந்த முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை.  எனவே ஆவின் பால் விலை உயர்த்தப்படும் என்பது வெறும் கற்பனை ஆகும்.

இதைக் குறித்து தவறான செய்தி பரவி வருகிறது. தற்போது சந்தையில் உள்ள பல்வேறு நிறுவன பாலுடன் ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை குறைவு ஆகும். 

தற்போது சந்தையில் தனியார் நிறுவன நெய் ரூ.1000 வரை விற்கப்படுகையில் ஆவின் நெய் ரூ.700க்கு விற்கப்படுகிறது. மேலும்  ஆவின் பொருட்களின் அளவிலும் தரத்திலும் எந்த சமரசமும் நாங்கள் செய்யவில்லை. 

ஆவின் குறித்து வரும்  புகார்களை ஆய்வுசெய்து உடனடியாக சரிசெய்து வருகிறோம்.  மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய தேவை உள்ளதால் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசி முடிவெடுப்போம்.” 

என்று கூறினார்.