கோவை

தமிழக அமைச்சர் முத்துசாமி மதுப்பழக்கம் உள்ளோரை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்னும் கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.  இந்த டாஸ்மாக் கடைகளால் மது அருந்துவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது ,

“தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு மதுப்பழக்கம் உள்ளோரை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். ஆகவே பரிசுத் தொகை அறிவித்து அனைத்து வகைகளிலும் மதுப்பழக்கத்தை தடுக்கவும், குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” 

என்று தெரிவித்துள்ளார்.