சென்னை

தீபாவளியையொட்டி இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே  இதையொட்டி ஞாயிற்றுக்கிழமையான இன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் எனத் தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தீபாவளிக்காக முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படுகின்றதால் பொதுமக்கள், ரேஷன் பொருட்களை இன்றும் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.