சென்னை
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மின் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் மினி பஸ் சேவை பேருந்து செல்லாத இடங்களுக்காகத் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவைக்குத் தொடக்கத்தில் இருந்தே ஆதரவு இல்லாமல் இருந்து வருகிறது. எனவே பல இடங்களில் இந்த மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை, “மக்களின் வசதிக்காகச் சென்னை மாநகர போக்குவரத்து 210 மினி பஸ்களை அறிமுகம் செய்தது. ஆனால் இதற்கு மக்களிடையே வரவேற்பு இல்லை . இதனால் தற்போது 64 மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 144 மினி பஸ்களை பயன்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த பஸ்களை தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் மூலம் மெட்ரோ ரயில் பயணிகள் எளிதில் ரயில் நிலையங்களை அடைய முடியும்” எனத் தெரிவித்துள்ளது.