சிலி நாட்டில் 38 பேருடன் ராணுவ விமானம் மாயம்

Must read

புண்டா அரேனாஸ், சிலி

நேற்று சிலி நாட்டின் விமானப்படையின் ராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மாயமாகி உள்ளது.

 

சிலி நாட்டில் உள்ள புண்டா அரேனாஸ் என்னுமிடத்தி இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு ஒரு ராணுவ விமானம் புறப்பட்டு அண்டார்டிக்கா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது.   நடுவழியில்  விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.   அதன் பிறகு அந்த விமானம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை சிலி விமானப்படை வெளியிட்டுள்ளது.  காணாமல் போன சி130 ஹெர்குலிஸ் ரக ராணுவ விமானத்தில் மொத்தம் 38 பேர் இருந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது   அத்துடன் அதில் 21 பேர் பயணிகள் எனவும் அரிக்கையில் காணப்படுகிறது.

இந்த விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.   சிலி அதிபர் செபாஸ்ட்டியன் பினரே, “ராணுவ விமானம் ஒன்று மாயமாகி உள்ளது மிகவும் கவலையை அளிக்கிறது.   நான் தொடர்ந்து நிலைமையை கவனித்து வருகிறேன். “ எனத் தெரிவித்துள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article