சென்னை: வடமாநில தொழிலாளர்கள் வதந்தி குறித்த போலி வீடியோ வெளியிட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  தொழிலாளி மனோஜ் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால் இன்று வடமாநிலத்தவர்கள் பிரச்சினை வெடித்துள்ளது. இதுதொடர்பான வெளியான போலி வீடியோ , வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக தமிழகஅரசும், டிஜிபுயும் விளக்கம் அளித்தனர். இருந்தாலும், பீகார், ஜார்கண்ட் மாநில அரசுகள் அதிகாரிகள் குழுவை அனுப்பி தமிழ்நாட்டில் ஆய்வு செய்து வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, உ.பி.மாநில பாஜக செய்திதொடர்பாளர்மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்  முகமது தன்வீர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பிரசாந்த் உமராவ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், வதந்தி பரப்புவோரை கைது செய்ய டிஜிபி உத்தரவின் பேரில் தனிப்படை அமைப்பு.

உ.பி.மாநில பாஜக செய்திதொடர்பாளர் உம்ராவுக்கு டெல்லி நீதிமன்றம் 15ந்தேதிவரை முன்ஜாமின் வழங்கியதுடன், முன்ஜாமின் கோரி தூத்துக்குடி நீதி மன்றத்தை நாடவும் அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையில், போலி வீடியோ வெளியிட்டதாகவும், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தங்கியிருந்த ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை காவல்துடிறயினர் கைது செய்துள்ளனர்.  இரு பிரிவினர் இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.