சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டதற்கு ரூ.968 கோடி ஒதுக்கும்படி சென்னை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்து
டிசம்பர் 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக, டிசம்பர் 3 மற்றும் 4ந்தேதிகள் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை மற்றும் சூறாவளி வீசியது. இதனால், சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதந்தது. இந்த வரலாறு காணத மழை ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் மழையால் பெரியளவில் பாதிப்புகள் எற்பட்டன. . சென்னையில், 193 இடங்களில், முதல் மாடி அளவுக்கு மழைநீர் தேக்கம் ஏற்பட்டது. பல பகுதிகளில், மழைநீர் வடிய ஐந்து நாட்கள் வரை ஆனது. மழைநீர் தேங்கிய பகுதிகளில், நீரை வடிய வைக்கவும், அங்கு மின்பழுதை சரி செய்து, உடனடி மின்சாரம் வழங்கும் பணிகள், குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
வெள்ள மீப்பு பணியில், மாநகராட்சியின் 23,000 பணியாளர்கள், 18,000 போலீசார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பணியாளர்கள் என 50,000க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தபட்டனர். இவர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் தங்குவதற்கான வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி தந்தது. அத்துடன், படகுகள் வாயிலாக மக்களை மீட்டது, அவர்களுக்கான உணவு பொருட்கள் வழங்கியது.
அந்த வகையில், சாலை, வாகன சேதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாநகராட்சிக்கு முதற்கட்டமாக 401.53 கோடி ரூபாய், அடுத்தகட்டமாக 566.86 கோடி ரூபாய் என மொத்தமாக 968.39 கோடி ரூபாய் ஒதுக்கும்படி மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளார்.
குறிப்பாக, வெள்ள பாதிப்பில் மாநகராட்சி பேருந்து தட சாலைகள் 300 கி.மீ., நீளத்துக்கு சேதமடைந்துள்ளது. அச்சாலையை தற்காலிகமாக சீரமைக்க 3 கோடி ரூபாய், உட்புற சாலைகள் 3,200 கி.மீ., நீளத்துக்கு 32 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. மேலும், 100 கி.மீ., பேருந்து தட சாலைகள் நிரந்தரமாக சீரமைக்க 69.58 கோடி ரூபாய், 350 கி.மீ., உட்புற சாலைகளுக்கு 110 கோடி ரூபாய் என பல்வேறு பணிகளுக்காக மாநகராட்சி சார்பில் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.