சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளம் – நிவாரணப் பணிகள் குறித்து  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் மற்றும்  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக  ஆலோசனை நடைபெற்றது.  மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் & திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும்,மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும். நிவாரணப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து;ம விவாதிக்கப்பட்டது.

முன்னதாக,  மழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட பல  பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 450 கோடி, சென்னை வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ. 561.29கோடி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதற்கடையில்  மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.