மதுரை: நடிகர் மதுரை மோகன் காலமானார். இவர் முண்டாசுப்பட்டி உள்பட பல படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மதுரை மோகன். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த மிகவும் பிரபலமானார். இந்த சூழலில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் மதுரை மோகன் இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த நடிகர் காளி வெங்கட் இரங்கல் தெரிவித்து  தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,   ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் @dir_ramkumar அவர்களுக்கும் “வீரன்” பட இயக்குனர் @ArkSaravan_Dir அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.