விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, புகைப்படத்துடன் படத்தின் டைட்டிலும் பிகில் என இடம்பெற்றிருந்தது.

பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பதற்கு முன்பாக இரண்டாவது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

மீண்டும் படம் குறித்து ட்வீட் செய்திருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “எதிர்பாராத ஒன்றை எதிர்பாருங்கள். வாழ்க்கை அற்புதமான தருணங்களால் நிறைந்தது. 6 மணிக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு போஸ்டர் வெளியிட பட்டுள்ளது . படத்தில் விஜய் பெயர் மைக்கல் என தெரிகிறது,