சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியை பணியிட மாற்றம் செய்து என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்ட உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
என்.எல்.சி நிறுவனத்த்தில், சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியாக இருப்பவர் திருவரசு. இவர், சமீபகாலமாக, நிறுவன அதிகாரிகளுடன் முரண்பாட்டுப் போக்கை கடைபிடித்து வந்தார். இதன் காரணமாக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை, நிறுவனத்திற்கு எதிராகவே மாற்றி தொழிலாளர் வேலைநிறுத்தம் ஏற்படுத்த முயன்றதாக கூறி, அவரை என்.எல்.சி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
என்.எல்.சி நிறுவனத்தின் உத்தரவை எதிர்த்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பிலும், திருவரசு சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொழிற்சங்கத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் திருவரசுவை பணியிட மாற்றம் செய்ததாகவும், தொழிலாளர் சட்டத்திற்கு விரோதமான இந்த உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.