பொன்ராம் இயக்கத்தில் , சசிகுமார் நடிக்கும் படம் “எம்ஜிஆர் மகன்” . ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.

சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்து அ.தி.மு.க பிரமுகர் ஆவடி குமார் ”கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்தமான, எம்.ஜி.ஆர். தன் குடும்பத்தில் இருந்து, தனிப்பட்ட எவரையும் முன்னிறுத்தியதில்லை. ஆகவே, ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற தலைப்பை மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.