சென்னை: எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நாளை நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஜன.31ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.  இதன் காரணமாக எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா நேற்று சென்னை உள்பட மாநிலம்  முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. முன்னதாக, எம்ஜிஆரின் பிறந்நநாள்  பொதுக்கூட்டங்கள் 5 நாட்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,   19, 20 ,21, 27, 28ஆகிய 5 நாட்களில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியில்செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலும், அதிமுக செயல்பட்டுவரும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் நாளை (ஜனவரி 19ந்தேதி) நடைபெற இருந்த  எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள பொதுக்கூட்டம்    ஜனவரி 31ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர் தொகுதியில் நாளை நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஜன.31க்கு தள்ளிவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் ஜன.31ம் தேதி நடக்கும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.