சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் எடப்பாடி, சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த என முதல்வர் எடப்பாடி புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகராக வந்து, அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர் எம்.ஜி.இராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். இன்று அவரது நினைவு தினம் நாடு முழுவதும் அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆரின் ரசிகர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திரைப்படங்கள் மூலம், வீர வசனங்களையும், மக்கள் நல நலங்களையும் முன்னிலைப்படுத்தியதுடன், பெண்கள் மீற்றும் தாய் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அதன் மூலம் ஆட்சியை பிடித்தவர்.  இன்றளவும் அவருக்கென ரனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பதை மறந்துவிட முடியாது.

இந்த நிலையில், அவரது நினைவுநாளையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு புகழாரம் சூட்டி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன் என தெரிவித்துள்ளார்.