சென்னை: எம்ஜிஆரின் வளர்ப்பு மகளாக கருதப்படுபவரும், மறைந்த முன்னாள்முதல்வர எம்ஜிஆருக்கு  கிட்னி கொடுத்து உதவியவருமான,  எம்.ஜி.ஆரின் அண்ணன்  எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கடந்த 1984ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு,  அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது சிறுநீரம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவரது அண்ணன் எம்ஜி சக்கரபாணியின் மகள் லீலாவதி, தனது சிறுநீரகத்தை கொடுத்து வாழ்வுளித்தார். இதனால் மேலும் பல ஆண்டுகள் எம்ஜிஆர் சிறப்பான ஆட்சி புரிந்தார்.
இந்த நிலையில்,  எம்ஜிஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி உடல்நலக் குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால்,  சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார்.

லீலாவதியின் மறைவு குறித்து அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.