மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயம்பட்ட நிலையில்,  20 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் சட்டவிரோதமாக பெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மெக்சிகோவில் உள்ள ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் ஏராளமானோர் பாத்திரங்களில் சேமித்து வந்தனர். அப்போது துரதிருஷ்டவசமாக தீ பிடித்தது. இதில், அந்த பகுதியில் பெட்ரோல் பிடித்துக்கொண்டிருந்த மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 20 பேர் வரை  உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 54 பேர் தீவிர காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, ஹிடால்கோ மாகாண கவர்னர் ஓமர் பயாத் தெரிவித்துள்ளார்.