சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு! அரசு விழா தேவையா?

Must read

 சேலம்:
ம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து   இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர்.
1cauvery-dam
காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற வேளையில் இதற்கு அரசு விழா தேவையா? என பொதுமக்கள் முனுமுனுக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம்  அறிவித்தபடி இன்று மேட்டூர் அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் திறப்பு விழாவில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, சரோஜா,  கருப்பண்ணன் ,விஜபாஸ்கர், கலெக்டர் சம்பத்உ ட்பட பலர்  கலந்து கொண்டு மலர் தூவி திறந்து  வைத்தனர்.

வீரநடை போடும் தமிழக அமைச்சர்கள்
வீரநடை போடும் தமிழக அமைச்சர்கள்

இந்நிலையில் சம்பா சாகுபடிக்கு அதிக நாட்கள் தண்ணீர் தர இயலாது என்பதாக விவசாயிகள் கவலையை தெரிவித்தனர். மேலும் தற்போது இருக்கும் நீர் போதுமானதாக இருக்காது என்றும் தெரிவித்து உள்ளனர்.
அணையின் நீர் இருப்பு 87 அடியாகவும், 50 டி.எம்.சி.,யாகவும் இருக்கிறது. தற்போது வெளியேறும் நீரின் அளவு, நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி.,நீராக இருக்கும். இன்று திறக்கப்பட்ட நீரினால் டெல்டா பாசன விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஆனால், கர்நாடகத்தில் இப்போதுவரை அங்குள்ள தமிழர்கள், கன்னட வெறியர்களால்  செத்துபிழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இங்கு மேட்டூர் அணையின் நீரை திறக்க இவ்வளவு அலபப்றை தேவையா என்று என்கிறார்கள்.
அதிமுக அமைச்சர்கள் குடும்ப சகிதம் சென்று அணையை திறந்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளதாக அங்குள்ள தமிழர்கள் கருதுகிறார்கள். இந்த தண்ணீர் திறப்பு படங்களை பார்த்தாலே கன்னட வெறியர்கள் மேலும் வெறித்தனமாக தாக்குவார்கள் என அச்சமுடன் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
காவிரி நீர் பிரச்சினையில் இரு மாநிலங்களும்  கனகனவென்று தகித்துக்கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற ஒரு ஆடம்பர நிகழ்ச்சியை அரசு தவிர்த்திருக்க வேண்டும். தண்ணீர் திறக்க அதற்குரிய பொறியாளர் மட்டும் இருந்தால் போதாதா? தண்ணீர் வராதா?  என்ன நடக்குது தமிழ்நாட்டில்…..
பாய்ந்தோடி வரும் காவிரி நீர்
பாய்ந்தோடி வரும் காவிரி நீர்

 

More articles

Latest article