முன்னாள் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்! கணவர் தவிப்பு!!

Must read

1hand
திருவண்ணாமலை:
திருமணமான 11நாளில் முன்னாள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார் புதுப்பெண். இதன் காரணமாக அவரை மணந்த கணவர் தவிப்புக்குள்ளானார்.
பெரணமல்லூர் அருகே திருமணமான 11 நாளில் மாஜி காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தார். இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும், வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் கடந்த 4ம்தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 15ம்தேதி இளம்பெண், தனது கணவருடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.அன்று மாலை மீண்டும் மாமியார் வீட்டுக்கு செல்ல முனுகப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் தம்பதியினர் நின்றுள்ளனர்.
அப்போது இளம்பெண், `தான் படித்த கல்லூரி சான்றிதழ்களை எனது வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டேன். நீங்கள் போய் அதை எடுத்து வாருங்கள்` என கணவரிடம் கூறியுள்ளார்.
இதனால் அவர் மாமியார் வீட்டுக்கு சென்று சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோது தனது மனைவி, பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த தனது காதலனுடன் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.
இவர்கள் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்போதே இருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை பெரணமல்லூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article