மேட்டூர்:
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 10,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 5300 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
Patrikai.com official YouTube Channel