சென்னை:
ர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி சமூக நீதி மாரத்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுகவினர் ஓர் ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இன்று காலை 4 மணியளவில் மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைந்தது.

4 பிரிவுகளில் (5 கி.மீ, 10 கி.மீ, 21 கி.மீ, 42 கி.மீ) நடந்த இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ்களும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி சமூக நீதி மாரத்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர் என்றும், மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.

மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ரூ. 3.42 கோடி வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.